பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறித்ததைத் தொடர்ந்து, பொங்கல் தொகுப்பிற்கான பணத்தை திமுக கட்டாயம் கொடுக்கும் என பாஜக தலைவர் அண்ணாமலை ஒரிரு நாட்களுக்கு முன்பு சொன்னது போலவே அமைந்துவிட்டதா என்கின்றனர் பாஜகவினர்.
ஒரிரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,
"தைப்பொங்கல் 2024-ம் ஆண்டு குடும்ப அட்டைதத்தாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டு்ள்ளது.
2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் வகையில் இரு நூற்று முப்பத்து எட்டு கோடியே தொண்ணூற்று இரண்டு லட்சத்து எழுபத்து இரண்டாயிருத்து எழுநூற்று நாற்பத்து ஒன்று (ரூ.238, 92, 72,741) செலவினம் ஏற்படும்.
கொள்முதல் செய்யப்பட உள்ள பச்சரிசி, கரும்பு, சர்க்கரை ரேஷன் கடைகள் மூலம் அனைத்து அரிசி பெறும் அட்டைத்தாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். கரும்பு ஒன்றுக்கு ரூ.33 கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், கடந்த ஆண்டு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்ட நேரத்தில் ரூ.1,000 பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரொகப்பரிசு அறிவிப்பு இடம் பெறவில்லை என்ற நிலையில்,
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சேலத்தில் பாஜக பாராளுமன்ற தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்தித்தார். அப்பொழுது தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் ரொக்க பணம் அறிவிக்காதது தொடர்பாக அவர் கூறும் போது " பொங்கல் தொகுப்பிற்கான பணத்தை திமுக கட்டாயம் கொடுக்கும். ஆனால், டிராம பன்னிதான் கொடுப்பாங்க.
எதிர்கட்சிகள் பொங்கல் தொகுப்பு பணம் கேட்ட வேண்டும். அதன் பின் அறிவிப்பாங்க. இது உதயநிதி தாத்தா காலத்து டெக்னிக். இதையெல்லாம் நாங்க பாத்தாச்சு என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அதே போல, இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதைத்தான் எங்கள் தலைவர் அண்ணாமலை அன்றே சொல்லிட்டாரே என்கின்றனர் பாஜகவினர்.