தமிழகத்தில் கடந்த 75 ஆண்டுகளில் கடன், 6 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 31 மாத திமுக ஆட்சியில் 2 லட்சத்து 61 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்த கடனை நாம் கட்ட 87 ஆண்டுகள் ஆகும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் பாதையாத்திரைக்கு சேலம் மாவட்டம் ஓமலூருக்கு நேற்று வந்த பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
திமுக ஆட்சியில் 35 அமைச்சர்கள் ஆட்சி செய்யக்கூடிய நிலையில், 11 பேர் மீது ஊழல் வழக்கு உள்ளது. அமைச்சர்கள் வரிசையாக சிறைக்குச் செல்வர். தமிழகத்தில் முன்னாள், இந்நாள் எம்எல்ஏ, அமைச்சர்கள், எம்பிக்கள் என 120 பேர் மீது ஊழல் வழக்கு உள்ளது. அவர்களை வீட்டுக்கு அனுப்பினால் போதும் தமிழகத்தில் ஏழை என்ற பேச்சுக்கு வாய்ப்பில்லை.
பத்தாவது ஆண்டில் பாஜக ஆட்சி அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2014ல் இந்தியா என்று சொன்னால் ஊழல் என்று சொல்பவர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. கடந்த 9 ஆண்டு பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி ஒரு குண்டு ஊசியை கூட திருடவில்லை.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தமிழக கடன் அதிகரித்துவிட்டது என்றார் ஸ்டாலின். தமிழகத்தில் கடந்த 75 ஆண்டுகளில் கடன் தொகை 6 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 31 மாத திமுக ஆட்சியில் 2 லட்சத்து 61 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்த கடனை நாம் கட்ட 87 ஆண்டுகள் ஆகும் இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.