• vilasalnews@gmail.com

2023 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிக மக்களால் பேசப்பட்ட அரசியல் தலைவர்?

  • Share on

2023 ஆம் ஆண்டின் கடைசி நாள் இன்று. இந்த ஆண்டு இந்தியா மற்றும் தமிழக அளவில் அரசியல் ரீதியாக பல அதிரடி மாற்றங்கள், திருப்புமுனைகள் ஏற்பட்டுள்ளது. 

அந்த வகையில், தமிழக அரசியலில் பல தலைவர்களுக்கான செல்வாக்குகள் உயர்வு, சறுக்கல், புதிய தலைவர்களுக்கான வரவேற்புகள், எதிர்ப்பு என பல விஷயங்கள் இந்த 2023 ஆம் ஆண்டில் நடந்துள்ளது என சொல்லலாம்.

கலைஞர், ஸ்டாலின் வரிசையில் உதயநிதி அரசியலில் கரை சேருவாரா? மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க கூடிய அரசியலை தொய்வின்றி பழனிச்சாமி முன்னெடுத்து சென்று வெல்வாரா? பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வேகம் தமிழகத்தில் தாமரையை மலரச்செய்யுமா? நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுமா? உள்ளிட்ட பல கேள்விகளோடு இந்த ஆண்டு நகர்ந்தது.

தமிழக அரசியலில் 2023 ஆம் ஆண்டு அதிகம் பேசுபொருளான, பல்வேறு தரப்பாலும் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயராக பாஜகவும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை பெயரே இருந்தது. அதற்கு அடுத்த படியாக, மத்திய பாஜக அரசுக்கு எதிரான தொடர் அரசியல் எதிர்ப்பு பேச்சு, சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு போன்றவற்றின் மூலம் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் உதயநிதி பெயர், அதற்கு அடுத்தடுத்த வரிசைகளில் முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி சீமான் போன்றோரின் பெயர்கள் இடம் பெற்றது.

மேலும், அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்விகளோடு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யின் பேச்சுகள் அதிகம் பேசப்பட்டவர்களின் வரிசைகளில் அடங்கியிருந்தது. ஆண்டின் இறுதியில் நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த்தின் மறைவை தொடர்ந்து, அவரது பெயரும் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மிக அதிக அளவில் அனைவராலும் உச்சரிக்கப்பட்டது.

இனி வரக்கூடிய 2024 ஆம் ஆண்டில், தமிழகத்தில் நடைபெற இருக்கும் அரசியல் நிகழ்வுகளை காண காத்திருப்போம்.

  • Share on

ஜனவரி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

மோடி - ஓபிஎஸ் சந்திப்பு...பிரதமர் மோடியிடம் ஓபிஎஸ் இது தான் பேசினாராம்!

  • Share on