ஜனவரி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக சார்பில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் பூத் கமிட்டி அமைத்தல், மகளிர் அமைப்பு, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை டிசம்பர் 4க்குள் முடிக்க கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
இப்பணிகள் முறையாக நடந்துள்ளதா என தலைமை நிர்வாகிகள் அடங்கிய குழு மாவட்ட வாரியாக சென்று ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியை டிசம்பருக்குள் முடித்து ஜனவரியில் தேர்தல் பணிகளை துவக்கவும், பொங்கல் பண்டிகைக்கு பின் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.