சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அவரது நீதிமன்ற காவல் நேற்று முடிந்தது. சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார்.
இதை அடுத்து நீதிமன்ற காவலை வரும் 20ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு வரும் திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.