• vilasalnews@gmail.com

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா... நடைமுறைக்கு வருமா என்பது சந்தேகத்துடன் தான் உள்ளது - கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

  • Share on

திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு வருகிற 14-ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி செய்து வருகிறார். அவர் மாநாடு நடைபெறும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் கனிமொழி எம்.பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இன்னும் 20 ஆண்டுகள் கழித்தும் நடைமுறைக்கு வருமா இல்லையா என சந்தேகத்துடன் பார்க்கும் சூழல் இருக்கிறது. ஏனென்றால் இந்த மசோதாவை மத்திய அரசு பல கட்டுப்பாடுடன் கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் யார் பேசினாலும் அவர்களை பேசவிடாமல் செய்யும் சூழல் இருக்கிறது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது மத்திய அரசுக்கு நம்பிக்கை இல்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தை முற்றிலும் அழித்து விட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

  • Share on

ராஜதந்திரி கலைஞருக்கு பிறகு மிகச்சிறந்த ராஜதந்திரி எடப்பாடி பழனிச்சாமி தான்!

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு

  • Share on