• vilasalnews@gmail.com

பல்லக்கு தூக்கி பழனிசாமி... மர்ம சந்திப்பின் அரசியல் என்ன? முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு

  • Share on

திருப்பூரில் மேற்மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

போடு தோப்புக்கரணம் என்று பாஜக சொன்னால், இந்தா எண்ணிக்கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் கட்சி தான் அதிமுக. இங்கு இவ்வளவு சண்டை நடந்த போது உள்துறை அமைச்சரைப் பார்க்க பழனிச்சாமி சென்றாரே... என்ன காரணம்?

ஊழல் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வருகிறது காப்பாற்றுங்கள் என்று காலில் விழ சென்றாரா? கோடநாடு வழக்கிலிருந்து நழுவிட சென்றாரா? எதற்காக தனியா சென்று உள்துறை அமைச்சரை சந்தித்தார்? இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை திடீரென்று சந்தித்தார்களே?

சென்னையில் இருந்து சென்றால் தெரிந்து விடும் என்று கொச்சியிலிருந்து சென்ற மரண சந்திப்புகளுக்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன? ஆட்சியில் இருந்தபோது மாநிலத்தின் நன்மைக்காக மத்திய பாஜக அரசு மூலமாக தமிழ்நாட்டுக்கு அதிமுக கொண்டு வந்த நன்மை என்ன? எதுவும் இல்லை.

ஒரே நாடு ஒரே தேர்தலை குப்புற விழுந்து ஆதரிக்கிறார் பலலக்குத் தூக்கி பழனிச்சாமி. நன்றாக இருக்கிறதல்லவா இந்த பல்லக்கு தூக்கி பழனிச்சாமி பட்டம்? என்ன அருகதையில் தமிழ்நாட்டு மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று பழனிச்சாமி பகல் கனவு காண்கிறார்? பழனிச்சாமி அவர்களே! சட்டமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் வந்தால் உங்கள் கட்சி இப்போது இருக்கும் நிலைமைக்கு உள்ளதும் போய்விடும், ஜாக்கிரதை.

பாஜகவின் பாசிச திட்டங்கள் எல்லாவற்றிற்கும் ஆட்சியில் இருந்தபோது தலையாட்டிவிட்டு, இன்றைக்கு பாஜகவை எதிர்க்கின்ற மாதிரி மக்களிடம் காட்டிக்கொண்டு, மறைமுகமாக பாஜக தலைவர்களை சந்தித்து கொண்டு இருக்கும் கொத்தடிமை கூட்டத்திற்கு, கடந்த நாடாளுமன்ற தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தர வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

  • Share on

சீமானுக்கு வீரலட்சுமி வக்கீல் நோட்டீஸ்

பாஜக - அதிமுக கூட்டணி விலகல் முடிவை எடப்பாடி பழனிச்சாமி எடுக்க இதுதான் காரணமா?

  • Share on