• vilasalnews@gmail.com

பாஜகவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை... அண்ணாமலையை தான் எதிர்க்கிறோம் - செல்லூர் ராஜூ திடீர் பல்டி

  • Share on

பாஜகவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அண்ணாமலையின் கருத்து செயல்பாடுகளை தான் எதிர்க்கிறோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட பாஜக துணை தலைவர் ஜெயவேல். இவர் ஏற்கனவே அதிமுகவில் மாநகராட்சி மண்டல தலைவராக இருந்து பாஜகவில் சேர்ந்திருந்தார். பாஜகவில் இருந்து விலகி தனது ஆதரவாளுடன் நேற்று மீண்டும் ஜெயவேல் அதிமுகவில் செல்லூர் ராஜூ முன்னிலையில் இணைந்தார். அப்போது செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பாஜக உள்ளிட்ட கட்சியில் உள்ள நிர்வாகிகள் அதிமுகவில் இணைய ஆர்வமாக உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைய இருக்கின்றனர். ஒரு போன் செய்தால் பாஜகவினர் காலில் எடப்பாடி பழனிச்சாமி விழுந்து விடுவார் என பேசுவது தவறு. மானத்தை இழந்து ரோஷத்தை இழந்து எடப்பாடி பழனிச்சாமி பாஜகவில் காலில் விழமாட்டார். 

பாஜகவிற்கும் எங்களுக்கும் பிரச்சனை உள்ளது என யாராவது பேசி இருக்கிறோமா? அண்ணாமலையின் கருத்து, செயல்பாடு இதைத்தான் எதிர்க்கிறோம். அண்ணாமலை சொன்ன விதம் தவறு என்று தான் கூறினோம்.

ஜெயலலிதா, அண்ணா குறித்து அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். முத்துராமலிங்கத் தேவரை நாங்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறோம். எங்கள் கொள்கை அண்ணாயிசம். எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷா ஆகியோர் பிரச்சனை இல்லை. இவர்கள் அதிமுகவையும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் நன்றாக மதிக்கின்றனர். அது எங்களுக்கு போதும். அண்ணாமலையை மட்டுமே நாங்கள் விமர்சிக்கிறோம். பாஜக தலைவரை நாங்கள் எப்படி மாற்ற சொல்ல முடியும்? பாஜக உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது. பாஜகவுக்கு அதிமுக முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மோடி தான் பிரதமராக வேண்டும் என நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாட்டில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தான் வரவேண்டும் என்று பாஜக அறிவிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

  • Share on

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு : பாஜக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்

அவர் என் கையால தான் சாகணும்னு முடிவெடுத்துட்டா... அதை நான் சந்தோசமாக எதிர்கொள்கிறேன் - பாக்சிங்கு ரெடியான சீமான்

  • Share on