நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பிரதமர் மோடி தாக்கல் செய்தார். இதனை வரவேற்று தூத்துக்குடியில், பழைய பேருந்து நிலையம் அருகில் பாஜகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில் கலந்து கொண்ட பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தேசியத் தலைமையின் ஆலோசனையின் பேரில் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார். அவரது ஆலோசனைபடி நாங்கள் செயல்படுவோம். பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் அரசியலில் அதிகளவில் பெண்கள் பங்களிக்கும் நிலை ஏற்படும்.
மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தில திமுக அரசு பெண்களை ஏமாற்றுகிறது. ஆனால் பிரதமர் மோடி அனைத்து பெண்களுக்கும் சம உரிமை வழங்கி வருகிறார் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பொதுச்செயலாலர் சத்தியசீலன், மாவட்ட துனை தலைவர் வாரியார், மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாலர் லதா, துனை தலைவர் உஷா, மண்டல் தலைவர்கள் செல்வி, ராஜேஷ்கனி, மாதவன், மண்டல பொதுச்செயலாலர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.