தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை ராமேசுவரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு நாட்களாக நடைபயணம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை, நடை பயணத்தின் போது ஆங்காங்கே சாலை ஓரங்களில் நின்ற முதியவர்கள், சிறு வியாபாரிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
எளிமையான முறையில், ஏழ்மையானவர்களை சந்தித்த அண்ணாமலையின் செயலை கண்ட இஸ்லாமியர் ஒருவர் அண்ணாமலையிடம் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் அவர், "தங்களை, வாழ்ந்து வரும் காமராஜர் ஆக பார்க்கிறேன்", என்றார். உடனடியாக குறிக்கிட்ட அண்ணாமலை, அவரைப் பார்த்து, அண்ணா முன்னாள் முதல்வர் காமராஜருக்கு நிகர் இவ்வுலகில் யாரும் தற்போது இல்லை. அதனால் என்னை இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காமராஜருக்கு நிகர் காமராஜர் மட்டுமே என்றார்.