கடந்த 2018 ஏப்ரல் 12-ல் ராணுவ கண்காட்சியை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்தார். அப்போது காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, அவருக்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் சமூக வலைதளத்தில் கோ பேக் மோடி என்ற முழக்கத்தை பரப்பினர்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு,அதே காவேரி பிரச்சனையை வைத்து திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கிறார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.
மோடிக்கு எதிரான எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் 17,18 தேதிகளில் பெங்களூரில் நடக்கும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, காவேரி பிரச்சனையில் கர்நாடகா காங்கிரஸ் அரசையும், சிவக்குமாரையும் கண்டிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை. எனவே அவர் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு கலந்து கொள்ள பெங்களூர் செல்லக் கூடாது. அப்படி சென்றால் அவர் தமிழகம் திரும்பும்போது கோ பேக் ஸ்டாலின் என்று சொல்வோம். கருப்பு பலூன்களை பறக்க விடுவோம் என்று கூறியுள்ளார்.