• vilasalnews@gmail.com

தமிழகத்தில் பாஜக பாணியில் காங்கிரஸ்... பாஜக ஐபிஎஸ் - காங்., ஐ.ஏ.எஸ்!

  • Share on

தமிழக காங்கிரசில் புதிய தலைவர் பதவிக்கான போட்டியில், எம்.பி.,க்கள் ஜோதிமணி, டாக்டர் செல்லகுமார், முன்னாள் எம்.பி., விஸ்வநாதன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் தற்போது, கர்நாடக மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், தமிழக காங்கிரஸ் சமூக வலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான சசிகாந்த் செந்திலும் சேர்ந்துள்ளார். 

கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வெற்றிக்கு சசிகாந்த் செந்தில் தலைமையிலான 'வார்ரூம்' முக்கிய பங்கு வகித்துள்ளது. தேர்தல் அறிக்கையில், எந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிட்டால் அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தரும் என்பதை, மேலிடத்திற்கு அறிக்கையாக சமர்ப்பித்தார். அதை பரிசீலித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தேர்தல் அறிக்கையை இறுதி செய்து வெற்றி பெற்றனர்.

அதேபோல், தமிழக மக்களின் பிரச்னைகளை அறிந்து தீர்வு வகுக்க வேண்டும். தொண்டர்களின் தேவைகளை அறிந்து, கட்சி வளர்க்க வேண்டும்.அதற்கான உத்தியும், ஆழமான புரிதலும் கொண்டவராக சசிகாந்த் செந்தில் இருப்பதாக, காங்., மேலிடம் கருதுவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

  • Share on

கூட்டணியில் இருந்து கொண்டே பொதுவெளியில் கூக்குரலிடுவதுதான் கூட்டணி தர்மமா? சி.பி.எம். டி.கே. ரங்கராஜனுக்கு முரசொலி நாளிதழ் கண்டனம்!

திமுக மாவட்ட செயலாளர் மாற்றம் - உட்கட்சி வட்டாரத்தில் பரபரப்பு!

  • Share on