சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி ஆளுநர் தெரிவித்த கருத்து பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், " ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு ஆளுநர் ஆன்.என்.ரவி இவ்வாறு பேசி வருகிறார். இதை வெளியில் பொது கூட்டத்திலோ, மாணவர்கள் மத்தியிலோ, தூத்துக்குடியிலோ அவர் பேச முடியுமா? நான் சவால் விடுகிறேன் என அவர் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் போராட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆன்.என்.ரவி பேசிய கருத்திற்கு பதிலாக, பொது கூட்டத்திலோ, மாணவர்கள் மத்தியிலோ, தூத்துக்குடியிலோ அவர் அவ்வாறு பேச முடியுமா? என்று சவால் விடுக்கிறேன் என்ற பெயரில் தமிழ்நாடு ஆளுநரை மறைமுகமாக மிரட்டும் தோனியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார் என்று ஒருபுறம் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக அரசியலில் ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கும் இடையேயான கருத்து போர் தீவிரமடைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.