• vilasalnews@gmail.com

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் அரசியலாக்க வேண்டாம் - கனிமொழி எம்.பி.,!

  • Share on

தமிழர்களையே அழிக்க வேண்டும் என்ற நோக்கிலும், தமிழக மாணவர்கள் மருத்துவம் பயில முடியாத சூழ்நிலைக்கு தள்ளியது யார் என்பது மக்களுக்கு தெரியும் என்று கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

தி.மு.க., துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., துாத்துக்குடியில் நிருபர்களிடம் கூறுகையில்,

மனசாட்சியுடன் பேசினால் தெரியும் தமிழ் மொழியை யார் வளர்கின்றார்கள்?யார் அழிக்க நினைக்கின்றார்கள் என்பது. கோவை கார் சிலிண்டர் வெடிப்புசம்பவம் என்பது யாரும் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், அதைபற்றி தேவையில்லாமல் பேசி மக்களிடம் காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்த நினைப்பது தவறான ஒன்று. இது மக்கள் மத்தியில் எடுபடாது. மக்களுக்கு யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பது தெரியும்.

இந்தியை திணிக்க நினைப்பது யார் என்பதை மனசாட்சியுடன் பேசினால் தெரியும். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து தேவையில்லாமல் பேசி அரசியல் ஆக்க வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • Share on

இந்திய சுதந்திரத்திற்கும் பாஜகவிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது - கே.எஸ்.அழகிரி!

அரசியலில் நீடிக்க அண்ணாமலை 'டிப்ஸ்'

  • Share on