சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு குறித்து ஜனவரி 3ந் தேதி மு.க அழகிரி ஆலோசனை
தமிழகத்தில் 2021 ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சென்னையில் உள்ள கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் வீட்டில் மு.க.அழகிரி செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஆதரவாளர்கள் தனிக்கட்சி தொடங்க வலியுறுத்தினால் நிச்சயம் தொடங்குவேன். சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு குறித்து ஜனவரி 3ந் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாகவும், ஆதரவாளர்களுடன் ஆலோசித்து அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்க பட உள்ளதாக கூறியுள்ளார்.
ஆலோசனை கூட்டத்தில் ஆதரவாளர்கள் கூறுவதை ஏற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திமுகவில் மறுபடியும் சேரும்படி எனக்கு எந்த அழைப்பும் இல்லை நடிகர் ரஜினியை விரைவில் கண்டிப்பாக சந்தித்து பேசுவேன்.
ஆதரவாளர்கள் தனிக்கட்சி தொடங்க வலியுறுத்தினால் நிச்சயம் தொடங்குவேன் என்று கூறினார்.