• vilasalnews@gmail.com

மாதம் ஒரு பொய்..மத்திய அரசு எழுதிய கடிதத்தை வெளியிடுக.... அண்ணாமலை ஆவேசம்!

  • Share on

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாதம் ஒரு பொய் சொல்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கரூரில் மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாதம் மாதம் ஒரு பொய் சொல்கிறார். மின் கட்டணத்தை உயர்த்தக் கோரி மத்திய அரசு எழுதிய கடிதத்தை செந்தில் பாலாஜி வெளியிட வேண்டும். கரூர் மாவட்ட மக்களை ஏழையாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான் செந்தில் பாலாஜியின் எண்ணம்.

அப்போதுதான் தேர்தலுக்கு தேர்தல் அவர்களுக்கு 1000, 2000 ரூபாய் பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முடியும். அதன் பிறகு மீண்டும் அவர்கள் ஏழையாக வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். டாஸ்மாக் கடை வைத்து தமிழக பெண்களின் தாலி அறுத்து வருகின்றனர். ஊழல் அரசியல்வாதிகளை அப்புறப்படுத்துவதே இலக்கு. ஏழை மக்களுக்காக பாஜக எப்போதும் உடன் நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

  • Share on

ஓ.பன்னீர்செல்வத்திடம் நலம் விசாரிக்கும் திட்டத்தில் சசிகலா! சந்திப்பு எப்போது?

இந்திய சுதந்திரத்திற்கும் பாஜகவிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது - கே.எஸ்.அழகிரி!

  • Share on