மேற்கு வங்கத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி திரும்பினார்.
2 நாள் பயணமாகச் சென்ற அவர், பிர்பூம் மாவட்டம் போல்பூரில் சுற்றுப்பயணம் செய்தார். மதியம் அங்குள்ள பாடகர் ஒருவரின் இல்லத்தில் அமித் ஷா மூத்த தலைவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார்.
இதையடுத்து, திறந்த வாகனத்தில் அமித் ஷா பேரணியாக சென்றார். இந்த பேரணியில் பாஜக தொண்டர்கள் லட்சணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் அமித் ஷா பேசுகையில், மேற்குவங்க மக்கள், மாநிலத்தில் மாற்றத்தை விரும்புவதாக கூறிய அவர், மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த பிரதமர் மோடிக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் எனவும், அப்படி தந்தால் மேற்குவங்கத்தை 5 ஆண்டுகளில் தங்க வங்கமாக மாற்றி கட்டுவோம் எனவும் தெரிவித்தார்.