பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்காத மாவட்ட செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 25ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி நிர்வாகிகளை முறையாக நியமிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தியும், மேற்பார்வையாளர் தமிழருவி மணியனும் உத்தரவிட்டுள்ளனர்.
அதே நேரம் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி போலியாக பூத் நிர்வாகிகளை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.