அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். அப்போது நத்தம் விஸ்வநாதன் அவர்களை சமாதானப்படுத்தி கொண்டிருந்தார்.
இந்தநிலையில் திடீரென கே.பி.முனுசாமி எழுந்து, "பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை நிச்சயம் நிறைவேற் றப்படும். அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும்”, என்றார்.
அப்போது அங்கு அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி. திடீரென எழுந்து கே.பி.முனுசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மூத்த நிர்வாகிகள் சிலர் சமா தானம் செய்ய முயன்றும் பலனில்லை. பின்னர் எடப்பாடி பழனிசாமி சொன்னதும் தனது கோபத்தை அடக்கிச் கொண்டு அவர் தனது இடத்தில் சென்று அமர்ந்து கொண்டார்.
அருகே அமர்ந்திருந்த செல்லூர் ராஜூ, செங்கோட்டை யன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம், “அதான் இதுகுறித்து தீர்மா னமே வரபோகுதே... அதற்கு முன்பாகவே இவர் எதுக்காக அதைப்பற்றி இப்போது சொல்கிறார்? நல்ல பெயர் வாங்குவதற்கு இப்படியா செய்வது?” என்று சி.வி.சண்முகம் ஆதங்கப்பட்டார். இதனால் பொதுக்குழு கூட்ட மேடையில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.