• vilasalnews@gmail.com

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தயார் - ராகுல் காந்தி சூசகம்

  • Share on

காங்கிரஸ் தலைவர் பதவியை மீண்டும் ஏற்க தயாராக இருப்பதாக ராகுல் காந்தி சூசகமாக தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தநிலையில், அவரது தாயார் சோனியா காந்தி இடைக்கால தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இருப்பினும் தலைவர் பதவிக்கு நிரந்தரமாக ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமென சில மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்த வண்ணம் உள்ளதால் இதற்கு  முடிவு கட்டும் நோக்கில் டெல்லியில் நேற்று மாலை சோனியா இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ராகுல் மீண்டும் தலைவராக வேண்டுமென கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ராகுல்காந்தி பேசுகையில், என்ன பொறுப்பை அளித்தாலும், அதை நிறைவேற்றி தருவேன் என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் விரைவில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் ஆக பொறுப்பேர்பார் என நம்பப்படுகிறது.

  • Share on

பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் அறிவிப்பு-எதிர் கட்சி தலைவர்vsமுதல்வர்

பூத் கமிட்டி நிர்வாகிகளை முறையாக நியமிக்க வேண்டும்- மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்

  • Share on