• vilasalnews@gmail.com

அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் - அவ்வை சண்முகம் சாலை பகுதியே போர்க்களமானது!

  • Share on

சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கிய நிலையில், பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்றுள்ளார்.

இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், அதிமுக தலைமை அலுலகத்தின் கதவுகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடித்து உடைத்து உள்ளே சென்றனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் அதிமுக தலைமை அலுவலகம் இருக்கும் அவ்வை சண்முகம் சாலை பகுதியே போர்க்களமாக காட்சி தருகிறது.

ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமைக் கழகத்தின் உள்ளே நுழைந்து, பேனர்களில் இடம்பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமியின் படங்களை கிழித்தெறிந்து அட்டகாசம் செய்தனர். அலுவலகத்திற்குள்ளும் புகுந்த ஓபிஎஸ் ஆதரவு அதிமுக தொண்டர்கள் அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • Share on

எப்போ மேடம் அமமுகவில் சேர போறீங்க... சசிகலா சொன்ன பரபர பதில்!

அதிமுக பொதுக்குழுகூட்டம் மேடையில் கே.பி.முனுசாமியுடன், சி.வி.சண்முகம் ‘திடீர்’ வாக்குவாதம்!

  • Share on