மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையகி வெளியே வந்த பின், தமிழகத்தில் முதலில் ஆன்மீக சுற்றுப்பயணம், பின்னர் அரசியல் சுற்றுப்பயணம், தற்போது புரட்சி பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்:
கோடநாடு வழக்கில் விரைவில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதில் முதல்வர் ஸ்டாலின் கொடுதத் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.
அதிமுக பொதுக்குழுவை நடத்த தடையில்லை என்று இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கி உள்ளது. ஆனால் சசிகலாவோ இந்த பொதுக்குழு சட்ட விரோதமானது என்று நேற்று குறிப்பிட்டார். ஜூலை 11ம் தேதி பொதுக்குழு சட்ட விரோதமாக நடக்கிறது. தொண்டர்கள் இதை எதிர்க்கிறார்கள். தொண்டர்கள் எதிர்ப்பை மீறி பொதுக்குழு நடக்கிறது. அதிமுக ஒன்றும் ஒருவரின் சொத்து கிடையாது. ஒருவரின் தனி வீடு கிடையாது என்று சசிகலா குறிப்பிட்டார்.
இதையடுத்து அங்கிருந்த செய்தியாளர் ஒருவர்.. எப்போ மேடம் அமமுகவில் சேர போறீங்க என்று கேட்டார். இதற்கு சட்டென அதிர்ச்சியாக ரியாக்சன் கொடுத்த சசிகலா அங்கும் இங்கும் முகத்தை திருப்பினார். ஒரு நிமிடம் யோசித்து.. சுதாரித்தபடி பதில் அளித்த அவர்.. நான் அதிமுகவின் பொதுச்செயலாளர். நான் ஏன் அமமுகவில் சேர வேண்டும்? என்று கேட்டு செய்தியாளர் சந்திப்பை நிறுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்தான் சசிகலா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.