தமது சுயநலத்திற்காக பொங்கல் பரிசு 2,500 ரூபாயை அறிவித்துள்ளாரா? திமுக தலைவர் முக. ஸ்டாலின் கேள்வி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் இருந்து ஆரம்பித்துள்ளார். பிரச்சாரம் தொடங்கிய முதல் நாளிலே அதிர வைக்கும் திட்டம் ஒன்றை அறிவித்தார்.
ஆம் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் அறிவித்தது சில மக்கள் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் சில மக்கள் இடையே அரசியளுக்காக நாடகம் என்றும் விமர்சனம் வர தொடங்கியது.
இந்நிலையில், எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் பொங்கல் பரிசாக 2,500 ரூபாயை அறிவித்து உள்ளாரா? என கேள்வி எழுப்பினார். மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் தராமல் 4 மாதத்தில் தேர்தல் வரும் நேரத்தில் அறிவித்து இருப்பது சுய நலத்தை காட்டுகிறது என்றும் ஏழை, எளிய மக்களுக்கும்,கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு,மழைநீர் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ரூபாய் 5,000 அளிக்கவேண்டும். எனவும் கூறினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி பாதிக்கபட்ட மக்களுக்கு 2,500 ரூபாய் தருவது தவறா என மக்களிடம் முதல்வர் கேள்வி எழுப்பினார்.