இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா தலைமையில் உள்ள உயர்மட்ட குழுவினர் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஆலோசனை செய்வதற்காக தேர்தல் ஆணையத்தினர் டிச.21 மற்றும் 22ம் தேதி தமிழகம் வருகின்றனர்.
அக்குழுவினர் 21ம் தேதி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசோனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
அதனை அடுத்து தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து டிச.22 ஆலோசனை செய்ய உள்ளனர். மேலும் வருகையின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியிணரிடன் கருத்து கேட்கவும், மனுக்கள் வாங்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.