• vilasalnews@gmail.com

”மக்களுக்குப் பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி” ஓபிஎஸ் காட்டம்

  • Share on

மக்களுக்குப் பயன் தராத, ஓயாத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள் எனவும், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்" என்பதற்கேற்ப மீண்டும் அஇஅதிமுக ஆட்சி மலரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், இதுபற்றி அரசியல் கட்சிகளின்தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், 

"2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொது தேர்தலில், தி.மு.கவின் பொய்யான, போலியான, நிறைவேற்ற முடியாத, சாத்தியமற்ற வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்ததன் விளைவாக தமிழ்நாட்டில் தி.மு.க., ஆட்சி தூரதிர்ஷ்டவசமாக அமைந்துவிட்டது.

இதன் காரணமாக, கடந்த ஓராண்டில் பொதுமக்கள் இன்பங்களை மறந்து துன்பங்களை மட்டுமே அனுபவித்து வருகின்றனர். மக்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி திமுகவிற்கு வாக்களித்தார்களோ அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

உதாரணமாக, தி.மு.கவின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று நீட் தேர்வு ரத்து நீட் தேர்வை ரத்து செய்ய கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்' என்று தி.மு.க.லின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஒரே கையெழுத்தில் நீ' தேர்வு ரத்து செய்யப்படும் என மேடைக்கு மேடை தேர்தல் பிரச்சாரத்தின்போது தி.மு.க. தலைவர்களால் பேசப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சி அமைந்து ஓராண்டாகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு முடிந்துள்ள நிலையில் இதற்கான சட்டமுன்வடிவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் ஒப்புதல் அளித்தப் பிறகுதான் மேற்படி சட்டமுன்வடிவு சட்டமாகும் என்ற நிலையில், ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்று முதலமைச்சருக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பது போல் மக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியது. வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு, கடந்த ஓராண்டில் பாபர் நீட் தேர்வு காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். நீட் தேர்விற்கு மூலக் காரணமாக இருந்துவிட்டு, இன்று நீட் தேர்வை ரத்து செய்யப் போகிறோம் என்று கூறுவது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் செயல்,

அடுத்த முக்கியமான வாக்குறுதி கல்விக் கடன் ரத்து, '30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஓராண்டாகியும் இது குறித்து தி.மு.க. அரசு வாய் திறக்கவில்லை. தி.மு.கவின் இந்த வாக்குறுதியை நம்பி வாக்களித்த மக்கள் பேலும் கடனாளிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். பொதுவாக, கல்விக் கடன் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் வங்கிகளில் தான் வழங்கப்படுகிறது. இதற்கான அதிகாரம் மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கி ஆகியவற்றிடம்தான் இருக்கிறதே தவிர மாநில அரசிடம் இல்லை.

வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்படவில்லை, நேர்மையான, சுதந்திரமான, ரியாயமான, நீதி தவறாத ஆட்சி நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை. மக்கள் அன்றாடம் வேதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க கவுன்சிலர்களால் பக்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாது. தினந்தோறும் பத்திரிகைகளை திறந்தாலே பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு பாதுகாப்பின்மை, அரசு நிர்வாகத்தில் தி.மு.க.வினரின் அராஜகங்கள், காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை, கொலைகள், கொள்ளைகள், காவல் துறைக் கட்டுப்பாட்டில் உயிரிழப்புகள் ஏற்படுதல், பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் தொடர் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுதல், சாதிக் கலவரங்கள், மாணவர்கள் ஆசிரியரைத் தாக்குவது என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

காவல் துறையினரைப் பார்த்து ரவுடிகள் நடுங்கிக் கொண்டிருந்த நிலை மாறி, ரவுடிகளையும், தி.மு.க.வினரையும் பார்த்து காவல் துறையினர் அஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் அச்சத்தின் உச்சத்தில் உள்ளார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. சட்டம்-ஒழுங்கு தான் இப்படி என்றால், மின்சாரத் துறை இதைவிட மோசமாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே மின்வெட்டு என்பது அடிக்கடி ஏற்படுகிறது என மக்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலைமை நீடித்தால், தமிழ்நாடு இருளில் மூழ்கிவிடுமோ, தமிழ்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற கவலை மக்காளிடையே வந்துவிட்டது.

தி.மு.க, அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கட்டுமானப் பொருட்களின் விலை சுட்டுக்கடங்காமல் சென்று கொண்டே இருக்கிறது. தபூரண மதுவிலக்கு என்று குரல் கொடுத்த தி.மு.க. இவை குறித்து பேசாமல் வாய்மூடி மவுனியாக இருப்பது கண்டு மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள். 'காவல் துறை கட்டுப்பாட்டில் ஏற்படும் தொடர் மர்ம மரணங்கள்' 'தருமபுர ஆதின விவகாரம்', 'டாஸ்மாக் பார் விவகாரம்' உள்ளிட்ட பலவற்றில் தி.மு.க. அரசின் அணுகுமுறையைக் கண்டு மக்கள் முகம் சுளிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நீட் தேர்வு ரத்து பிரச்சனையில் மேதகு ஆளுநரை எதிர்க்கின்ற தி.மு.க. அரசு, வரிப் பகிர்வு விஷயத்தில் மத்திய அரசை எதிர்க்கின்ற தி.மு.க. அரசு, முல்லைப் பெரியாறு விஷயத்தில் பல்வேறு இடையூறுகளை தமிழ்நாட்டிற்கு அளித்துக் கொண்டிருக்கின்ற கேரள அரசை எதிர்க்கவோ, மேகதாது அணைப் பிரச்சனையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்க்கவோ தி.மு.க. தயக்கம். காட்டுவது வியப்பாக இருக்கிறது. ஒருவேளை இதுதான் திராவிட மாடல் போலும்! மொத்தத்தில், மக்களுக்குப் பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள். 'தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்' என்பதற்கேற்ப அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மீண்டும் மலரும்.' என அந்த அறிக்கையில் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

  • Share on

ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தி கொண்டு வர முயற்சிப்பதற்கு இது தான் காரணமா? கனிமொழி சொல்வது இது தான்!

தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்.. நயினார் நாகேந்திரன் பரபர பேச்சு!

  • Share on