• vilasalnews@gmail.com

அரசியலுக்கு வருமாறு, தமிழக இளைஞர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு

  • Share on

தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர, அரசியலுக்கு வருமாறு, இளைஞர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை மதுரையில் தொடங்கிய கமல்ஹாசன், " தலைநிமிரட்டும் தமிழகம் " எனும் தலைப்பில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

ஜனவரியில் ஜல்லிக்கட்டு - மே மாதம் மல்லுக்கட்டு என கமல் கூறினார்.

முன்னதாக, மதுரையில் ஆரப்பாளையம், அவனியாபுரம், பழங்காநத்தம், மேலமாசி வீதி - வடக்கு மாசி வீதி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில், கமல் பிரசாரம் செய்தார்.

மதுரையில், நாளை திங்கட்கிழமையும், மீண்டும், கமல் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

  • Share on

டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் டிச.21 தமிழகம் வருகை

  • Share on