’ஜீ பூம் பா’ மந்திரம் போல் உடனடியாக முதல்வராக வேண்டுமென மு.க.ஸ்டாலின் நினைக்கிறார் - என அமைச்சர் செல்லூர் ராஜூவிமர்ச்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லுர் ராஜி பேசியதாவது' எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் விளம்பரத்திற்காக போராட்டத்தை நடத்துகிறார். பசுமை வழி சாலை திட்டத்தை எதிர்க்கிறது ஒரு வேலையாகவே செய்கின்றனர்.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 6வழி சாலை திட்டத்தின் போது ஏராளமான மரங்கள் அகற்றப்பட்டன. அப்போது ஏன் மவுனமாக இருந்திர்கள் என்றும்' 1000 ஆண்டுகள் பழமையான மரங்கள் அகற்றிய போது கூட மக்களுக்காக எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா அதை எதிர்க்கவில்லை.
’ஜீ பூம் பா’ மந்திரம் போல் உடனடியாக முதல்வராக வேண்டுமென மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்.சைக்கிளில் சென்ற ஆ. ராசா வெளிநாட்டு கார்களில் சுற்றுகிறார். இவ்வளவு வசதி அவருக்கு எங்கிருந்து வந்தது?என கேள்வி எழுப்பினர்.
2ஜி வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டு இருப்பதால் திகார் சிறை காத்திருப்பதாகவும் கூறினார்.