• vilasalnews@gmail.com

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் ஓட்டுப்போட வரவில்லை... ஏன்?

  • Share on

''கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ளதால், மருத்துவர்கள் ஆலோசனைப்படி, விஜயகாந்த் ஓட்டுப்போட வரவில்லை,'' என, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா கூறினார்.

சென்னை சாலிகிராமம், காவேரி பள்ளியில், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா, அவரது இரண்டு மகன்களுடன் வந்து ஓட்டளித்தார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை போலவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஓட்டளிக்க வில்லை. இதனால், விஜயகாந்தை பார்க்க வந்திருந்த கட்சியினர் ஏமாற்றத்துடன் சென்றனர்.

பிரேமலதா கூறியதாவது:

கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ளதால், மருத்துவர்கள் ஆலோசனைப்படி, விஜயகாந்த் ஓட்டளிக்க வரவில்லை. அதனால், நானும், என் மகன்களும் ஓட்டளித்து, ஜனநாயக கடமை ஆற்றியுள்ளோம். தி.மு.க.,வை தவிர, மற்ற கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. எனவே, ஓட்டு சதவீதம் பிரிவதற்கு வாய்ப்புள்ளது.

நியாயமான தேர்தல் நடந்ததால், நிச்சயமாக தே.மு.தி.க.,விற்கு அதிக வெற்றி கிடைக்கும். எங்கள் ஓட்டு வங்கியை நிரூபிப்பதற்காக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிகளவில் போட்டியிட்டு உள்ளோம். சென்னையில், 156 வார்டுகளில் தே.மு.தி.க., போட்டியிடுகிறது. தேர்தலில், 50 சதவீத வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. பெண்கள் போட்டியிட தயங்குவதால், 200 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை.

ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை, மக்கள் தடுக்கின்றனர். அதிகாரிகள் யாரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. போலீஸ் துணையுடன் கோவை, கரூர், சென்னை போன்ற இடங்களில் பணம் கொடுத்துள்ளனர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாததால், ஓட்டுப் போட மக்கள் ஆர்வம் காட்டவில்லை. எல்லா இடங்களிலும் மக்களிடம் வெறுப்பை பார்க்க முடிகிறது. இவ்வாறு பிரேமலதா கூறினார்.

  • Share on

73 வது இந்திய குடியரசு தினம் : மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து !

இதே மாதிரி எனக்கும் பேச தெரியும்! சட்டசபையில் எடப்பாடியிடம் சீறிய துரைமுருகன்!

  • Share on