மாணவி லாவண்யா விவகாரத்தில் ஏன் கனிமொழி குரல் கொடுக்கவில்லை என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ஒருவரால் ஒரு மாணவிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு, பள்ளிக்கு எதிராக கொதித்தெழுந்த கனிமொழி அவர்களே, தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி புனித ஹிருதய பள்ளியின் மதமாற்ற கொடுமையினால் உயிரிழந்த லாவண்யா மரணம் குறித்து உங்களின் மௌனம் ஏன்? என்று கேட்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
அவர் மேலும், ‘’மத அரசியலா? மதவாதமா? ஓ! நீங்கள் பகுத்தறிவுவாதியல்லவா? மறந்து விட்டேன்’’என்கிறார்.
சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்திலும் கனிமொழி எம்பி தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். ஆனால் மாணவி லாவண்யா விவகாரத்தில் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று தான் நாராயணன் திருப்பதி இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறார்.