• vilasalnews@gmail.com

ஜனவரியில் கட்சி... டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பு!’- ரஜினிகாந்த்

  • Share on

ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ரஜினி காந்த் அரசியலுக்கு வரப்போவதாக யூகங்கள் கிளம்பி 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ரஜினி காந்த் அரசியல்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். வரும் 2021 ஜனவரியில் கட்சி தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் ஊழல் அற்ற ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியலை விரும்புவதாக முன்பு கூறியிருந்தார்.  அதன்படி தான் புதிய கட்சி தொடங்கப்படும் என்று இன்று அறிவித்துள்ளார்,

ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம் .. நிகழும்!" என்று கூறியுள்ளார்.


ரஜினிகாந்த் அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி தனிகட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளதால் அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. 

ரஜினி தனது ட்வீட்டில் கூறிய படி நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியலை முன்னெடுத்தால், அதை கண்டு மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவர். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துவிட்டால் அதற்கு என்ன பெயர், எப்போது அறிவிப்பு, மாநாடு நடைபெறுமா என்பது போன்ற விவரங்கள் டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்

ரஜினி கூட்டணி அமைத்து போட்டுயிடுவாரா அல்லது தனியாக போட்டியிடுவாரா என்பது தெரியவில்லை.முதல்வர் வேட்பாளராக ரஜினியை தவிரவேறு யாரையும் அவரது தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதால் கூட்டணிக்கு வாய்ப்பு குறைவு என்றே தோன்றுகிறது . அப்படியே தன் நண்பர் கமலைப்போல் தனித்து போட்டியிட்டால் அற்புதம்.. அதிசயம் .. நிகழுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

  • Share on

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டிச.5ல் திமுக ஆர்ப்பாட்டம்

“சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு” - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

  • Share on