• vilasalnews@gmail.com

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டிச.5ல் திமுக ஆர்ப்பாட்டம்

  • Share on

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்களில் டிச.5ல் திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் புராரி மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், கடந்த வியாழக்கிழமையில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு, பகலாக அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 8வது நாளாக இந்த போராட்டம் இன்றும் நீடிக்கிறது.

இதனிடையே மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தலைமையில் விவசாயிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பல்வேறு மந்திரிகளும் பங்கேற்றனர். இதேபோன்று விவசாயிகள் சார்பில் 35க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.  எனவே இன்று  2-ம் சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது.

இந்நிலையில் டெல்லி விவசாயிகள்  போராட்டம் குறித்து, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், விவாயிகள் மீதான தாக்குதல் மற்றும் மத்திய அரசின் அலட்சியப்போக்கு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதனை தொடர்ந்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 5ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 5ம் தேதியன்று காலை 10 மணிக்கு, மாவட்ட தலைநகரங்களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • Share on

புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு: அதிமுக அரசு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்துள்ளது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

ஜனவரியில் கட்சி... டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பு!’- ரஜினிகாந்த்

  • Share on