• vilasalnews@gmail.com

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக நடக்கிறது : ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

  • Share on

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக நடப்பதாக ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில்:

டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விவசாயிகள் போராட்டம் திட்டமிட்டு அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகளால் நடத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு குறுகிய கால நன்மையை கூறி அவர்களின் வருங்கால தொடர் வளர்ச்சியை, வருமானத்தை எதிர்க்கட்சிகள் பொய்ப்பிரச்சாரத்தின் மூலம், தவறான செய்திகளைப் பரப்பி விவசாயிகளை திசை திருப்ப நினைக்கக் கூடாது. அப்பாவி விவசாயிகள் இதற்கு பழியாகக்கூடும்.

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பெரும் பயன் தருவதோடு விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலுக்கும் பாதுகாப்பு கொடுக்கக்கூடிய வகையில் அமையும்.

எனவே எதிர்க்கட்சியினர் ஏதேனும் அரசியல் செய்ய நினைத்தால் பொது மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கலாமே தவிர தேவையற்ற போராட்டத்திற்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது.

பொதுவாக எதிர்க்கட்சிகளுடைய அரசியல் லாபத்திற்கு அப்பாவி விவசாயிகள் பலிகடா ஆகிவிடக்கூடாது. ஏமாந்து போகக்கூடாது.

  • Share on

மதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி புயலால் திமுகவுக்கு பாதிப்பு: அமைச்சர் உதயகுமார்

புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு: அதிமுக அரசு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்துள்ளது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

  • Share on