• vilasalnews@gmail.com

மாரிதாஸ் கைது : சீமான் எதிர்ப்பு!

  • Share on

மாரிதாஸ் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முப்படைகளின் தலைமைத் தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தில் உயிரிழந்தது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக ஆதரவாளரும்  யூடியூபருமான மாரிதாஸ் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். மாரிதாஸ் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "மாரிதாஸ் கருத்து கோட்பாடுகளில் முழுமையாக முரண்படுகிறேன். ஆனால் அவர் கைது செய்யப்பட்டதை கடுமையாக எதிர்க்கிறேன்.  ஒரு ஜனநாயக நாட்டில் எதையுமே பேசக்கூடாது என்று மாரிதாஸ் சார்ந்திருக்கும் பாஜக சொல்வதையும் ஏற்க முடியாது. திமுக எடுக்கும் முடிவையும் ஆதரிக்க முடியாது.

கருத்து சுதந்திரத்திற்கு எதிராக கைது செய்தால் நாங்கள் என்னதான் பேசுவது? அதேபோல தம்பி சாட்டை முருகனையும் வேண்டும்என்று கைது செய்தனர். உங்க கூடவே இருக்கார்  எங்களுக்கு நெருக்கடி என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  நான் அனுப்புகிறேன் என்று அவரை நான் சரணடைய வைத்தேன்.  இந்த அரசு எவ்வளவு வன்மம் ஆக இருக்கிறது அவரை பிணையில் எடுக்க போராடும் போது தான் தெரிந்தது.  மாரிதாஸுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் " என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், " மணிகண்டன் உயிர் இழந்ததில் கருத்து தெரிவித்த மாரிதாஸின் கருத்தை நான் ஏற்கிறேன்.  தமிழக அரசை கண்டித்து நானும் அறிக்கை வெளியிட்டிருந்தேன் . மீனவர் ராஜ்கிரன் உயிரிழப்பின் போதும்,  தமிழக முதல்வர் மௌனமாக தான் இருந்தார். அவர் எதிர்கட்சியாக இருக்கும்போது பேசிய பேச்சுக்கும்,   முதல்வராக மாறியபின் பேசும் பேச்சுக்கும்  நிறைய வேறுபாடுகள் இருக்கிறது.  

அதேசமயம் ஹெலிகாப்டர் விபத்திற்கு திமுகவையும்,  தமிழகத்தையும் இழுப்பது  தவறு.  வானூர்தியை திமுகவா வாங்குகிறது? மாரிதாஸின் ஆதரவு கட்சி தான்  வாங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 

  • Share on

வேளாண் சட்டத்தை முழுமையாக புரிந்துக்கொண்ட பிறகு, திருத்தங்களுடன் மீண்டும் அமல்படுத்தப்படும் - தமிழக பாஜக பொதுச்செயலாளர்

மூன்றாவது கூட்டணி - காங்கிரசை விட்டு வெளியேறுகிறதா திமுக?

  • Share on