• vilasalnews@gmail.com

மதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி புயலால் திமுகவுக்கு பாதிப்பு: அமைச்சர் உதயகுமார்

  • Share on

மதுரையில் மையம் கொண்டிருக்கும் மு.க.அழகிரி புயலால் என்கிற திமுகவுக்கு பாதிப்பு என மக்கள் பேசிக் கொள்வதாக தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

புரேவி புயல் இலங்கையில் கரையை கடப்பதாக தகவல் வந்துள்ளது, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புரேவி புயலை எதிர்க்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. தமிழக அரசு எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். புயல்கள் வருவதற்கு முன்னரே முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். புயலால் உயிர் மற்றும் பொருட்கள் சேதம் இல்லாமல் புயலை எதிர்க்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புயலின் நிலையை கண்காணித்த பிறகு தான் விடுமுறை குறித்த அறிவிப்பு கொடுக்க முடியும்.


ஆனால்  திமுகவில் ஒரு பூகம்பம் உருவாகும், பூகம்பம் வலுபெறுமா? வலுபெறாதா? என தெரியவில்லை. மதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி என்கிற புயலால் திமுகவுக்கு பாதிப்பு உண்டாகும் என மக்கள் பேசுகிறார்கள். என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

  • Share on

சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும்- மு.க.அழகிரி

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக நடக்கிறது : ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

  • Share on