தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப் பட்டிருக்கிறார்.
அவருக்கு பதிலாக தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள் ளார். இந்த புதிய ஆளுநரை வரவேற்று பாஜகவினர் பலர் தங்கள் சமூக வலைத் தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என். ரவி ஐபிஎஸ் என்பதற்கு பதிலாக ஐஏஎஸ் என குறிப்பிட்டிருக்கிறார் என்று எச்.ராஜாவை ஓட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள். இன்னும் சில நிர்வாகிகள் பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருக்கும் மகாலட்சுமி தனது முகநூல் பக்கத்தில் ஆளுநராகப் பொறுப்பேற்கும் மேதகு ரவிசங்கர் பிரசாத் அவர்களை வாழ்த்தி வரவேற் கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஆர். மகாலட்சுமி தனது முகநூலில், தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்கும் மேதகு ரவிசங்கர் பிரசாத் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டு விட்டு ஏ .ஆர் மகாலட்சுமி என்ற பெயரை போட்டு, தனது பெயருக்கு கீழே தான் படித்து வாங்கியதாக உள்ள பட்டங்களை நீண்ட வரிசையில் வரிசைப்படுத்தி இருக்கிறார்.
இதனால்தான், இவ்வளவு படிப்பு படித்தும் சரியான புரிதலின்றி பொய்யாக சொல்ல வேண்டிய அவசியம் என்ன முகநூலில் இப்படியெல்லாமா பதிவிடுவது என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.