• vilasalnews@gmail.com

கைப்பிடித்து ஆறுதல் கூறிய சசிகலா, கண்ணீர் விட்ட ஓபிஎஸ்: 4 ஆண்டுக்குப்பின் நேரில் சந்திப்பு!

  • Share on

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மரணத்தை தொடர்ந்து சசிகலா ஓ.பி.எஸ்ஸை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. நலக்குறைவால் கடந்த 22ம் தேதி  விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

கடந்த 2 வார காலமாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள்,  உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

சட்டமன்றத்தில் இருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில்,  ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவிக்க தனியார் மருத்துவமனைக்கு சசிகலா நேரில் வருகை தந்தார்.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு சசிகலா நேரில் ஆறுதல் தெரிவித்தார். 

சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு சென்ற சசிகலா கண்கலங்கிய ஓ.பன்னீர் செல்வத்த்தை சசிகலா கையை பிடித்து ஆறுதலாக சில வார்த்தைகளை கூறினார். மேலும்  அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். 

பல்வேறு அரசியல் மோதல்கள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் திடீரென சசிகலா இப்படி மருத்துவமனைக்கு வந்தது அங்கிருந்த அதிமுகவினர் இடைய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் காலையிலேயே வந்துவிட்டு சென்றது, அதன்பின் சசிகலா வந்தது என்று இன்று மருத்துவமனையில் தமிழ்நாடு தலைவர்கள் அரசியல் நாகரீகத்தோடு நடந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

4 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை. கடைசியாக ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு எதிராக மெரினாவில் தியானம் செய்வதற்கு முதல்நாள்தான் இருவரும் சந்திப்பு நடத்தினார்கள். அதன்பின் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை. இந்த நிலையில் இன்று சசிகலா ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.

  • Share on

“ராகவன் வீடியோவ போட சொன்னதே அந்த நாய் தான்” – லீக்கான அண்ணாமலை ஆடியோக்கள்…

கடவுள் நம்பிக்கையுடன் உள்ள பாஜக பெரியாரின் பிறந்தநாள் அறிவிப்பை வரவேற்கிறது!

  • Share on