தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கே.டி.ராகவன் லீக்ஸ் தான் ஹாட் டாபிக்.
தமிழக பாஜக தலைவர்களும் நிர்வாகிகளும் அக்கட்சியில் இருக்கும் பெண் நிர்வாகிகளுடன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ரூம் போட்டு கூத்தடிப்பதாக எல்.முருகன் தலைவராக இருந்தபோதே குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது ராகவன் வீடியோ கால் மேட்டரில் இது ஊர்ஜிதமாகியுள்ளது. கே.டி.ராகவன் பெண் நிர்வாகி ஒருவருடன் ஆபாசமாக வீடியோ காலில் பேசுவது போலவும், அவருடன் பேசிக்கொண்டே சுய இன்பம் மேற்கொண்டது போலவும் அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
ராகவன் மட்டுமல்லாமல் இன்னும் 15 தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளின் 60 வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும் வீடியோவில் பேசியிருந்தார் மதன். குறிப்பாக அண்ணாமலையிடம் இந்த வீடியோவை காட்டியதாகவும், அவர் தான் இணையத்தில் லீக் செய்ய சொன்னதாகவும் கூறியிருந்தார். அண்ணாமலை நேர்மையானவர் என்பதால் ராகவன் வீடியோவை வெளியிட சொன்னார் என மதன் தெரிவித்திருந்தார். வீடியோ வெளியாகி ராகவன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓட, அண்ணாமலை தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லாதது போல அறிக்கை வெளியிட்டார்.
வீடியோ தொடர்பாக மதன் பேசியது உண்மை தான் எனவும், ஆனால் தான் வெளியிட சொல்லவே இல்லை என்ற சூடத்தில் அடித்து சத்தியம் செய்யாத குறையாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பின் மதன் ரவிச்சந்திரன் அவர் தோழி வெண்பா கீதைய்யன் ஆகிய இருவருமே கட்சியிலிருந்து அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர். மதனுடைய Madan Diary என்ற யூடியூப் சானலும் முடக்கப்பட்டது. மதன் பொய் பேசியது போலவும், தான் நேர்மையானவர் என்பது போலவும் அறிக்கை வெளியிட்ட அண்ணாமலையின் உண்மை முகத்தை மதன் ரவிச்சந்திரன் தற்போது தோலுரித்துள்ளார்.
அவருடைய யூடியூப் சானலை முடக்கியிருந்தாலும் மதனின் பேஸ்புக் பக்கம் முடக்கப்படவில்லை. அதில் இன்று கே.டி.ராகவன் தொடர்பாக அண்ணாமலை பேசிய ஆடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். “Annamalai Audios exposed…. அண்ணாமலை ஆடியோக்கள் – சிக்கும் போலி சிங்கம்… பார்த்து பலன் அடையுங்கள், மக்களே!” என்று குறிப்பிட்டு மதன் வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார்.
அதில் இடையிடையே அண்ணாமலை பேசிய ஆடியோக்களையும் ஒலிபரப்பியுள்ளார். அண்ணாமலை யின் ஒவ்வொரு ஆடியோவை வைத்து பார்க்கையிலும் இந்த வீடியோ கட்சி அலுவலகத்திலிருந்து வீதிக்கு வரும் வரைக்கும் முழு காரணமாக இருந்தவர் சாட்சாத் அண்ணாமலை தான் என்பது ஆதாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
கட்சிக்குள் நடவடிக்கை எடுக்க தனக்கு தைரியம் இல்லை எனவும், அதனால் நீங்கள் வீடியோ வெளியிட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி நீதி கிடைக்கும் என்றும் ஒரு ஆடியோவில் அண்ணாமலை பேசியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் பாஜகவிற்குள் பாலியல் அத்துமீறல் நடந்துகொண்டிருப்பதை அவர் பல இடங்களில் குறிப்பிடுகிறார். ஆனால் அறிக்கையில் பாரம்பரியத்தையும் மரபையும் கட்டிக்காக்கும் பாஜகவின் பொறுப்பிலும் நிர்வாகத்திலும் உள்ள பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள். மிகுந்த மரியாதை யுடன் நடத்தப்படுகிறார்கள் என்று பொய்யாக குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக அந்த வீடியோவை மதன் தன்னிடம் காண்பிக்கவே இல்லை என்று சொல்லியிருந்தார். ஆனால் அண்ணாமலை ராகவனின் வீடியோவை பார்த்தது போல் ஆடியோவில் பேசியிருக்கிறார்.
அதேபோல் மதனுக்கு எம்எல்ஏ பதவி வாங்கி தருவதாகவும் வெண்பாவுக்கு கட்சிக்குள் நல்ல பொறுப்பை பெற்று கொடுப்பதாகவும் பேரம் பேசியிருக் கிறார். ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி பேசி மதனையும் வெண்பாவையும் ட்ரிக் செய்துள்ளார். அவர் ராகவனை காப்பாற்றவதற்கும் முயற்சி செய்திருக்கிறார். காலை வாரவும் திட்டம் போட்டிருக்கிறார். இருவேறு மனநிலையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி ராகவனையும் மதனையும் திட்டம் தீட்டி கட்சியிலிருந்து தூக்கி வீசியிருக்கிறார் அண்ணாமலை.