தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு இன்று 382வது பிறந்தநாள். இதை முன்னிட்டு சென்னையின் பெருமையினையும், சென்னைக்கும் தங்களுக்கும் உள்ள தொடர்பினையும் பிரபலங்கள் சொல்லி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சென்னை வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.
கல்லூரிப் படிப்பை முடிச்சதும் சினிமா ஆசையில் 20 வயசுல சென்னைக்கு பஸ் ஏறி வந்துட்டேன். சென்னைக்கு வந்து முப்பது வருடங்கள் ஓடிவிட்டன . சென்னைக்கு நான் கிளம்பியபோது, மாட்டுக்கறி மட்டும் சாப்பிடக்கூடாது. மாடு நமக்கு தெய்வம். அதனால மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது. இந்த ஒரே ஒரு விஷயத்த மட்டும் பண்ணிடாதப்பா என்று என்கிட்ட சத்தியம் வாங்கினார் அப்பா. ஆனால் அந்த சத்தியத்தை இன்னைக்கு வரைக்கும் என்னால காப்பத்த முடியல .
மாமாவுக்கு செய்த சத்தியத்தை காப்பற்றவாவது மாட்டுக்கறியை சாப்பிடாமல் இருங்களேன் என்று சொல்வார் மனைவி. மாட்டுக்கறியில் தான் அதிக புரதம் இருக்கிறது. அதனால்தான் சாப்பிடுகிறேன் என்று சொல்லிவிடுவேன்.
அன்றைய காலகட்டத்தில் குறைந்த விலையில் ஒரு ரூபாய்க்கு கிடைத்தது மாட்டுக்கறி. என் கையில் பணமில்லாத அந்த காலத்துல ஒரு ரூபாய்க்கு மாட்டுக்கறி வாங்கி சாப்பிடுவேன். மாட்டுக்கறி சாப்பிட்டால் அடுத்த நாளைக்கும் அது எனர்ஜி யோடு இருக்க வைக்கும். ஒரு நாள் மாட்டுக்கறி சாப்பிட்டா அடுத்த ரெண்டு மூணு நாளைக்கு பசி தாங்க முடியும்.
நாளைக்கு கராத்தே போட்டி என்றால் முதல் நாளே ஒரு கிலோ மாட்டுகறி சாப்பிடுவோம் . இத்தனை அதிகம் புரத சத்து உள்ள அதை சாப்பிடுவதற்கு தான் சமூகத்தில் எதிர்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.