• vilasalnews@gmail.com

தமிழகத்தில் பா.ஜ.க மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசளிப்பு!

  • Share on

சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.கவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்காக பாடுப்பட்ட 4 மாவட்ட தலைவர்களுக்கு அக்கட்சி சார்பில் இன்னோவா கார் பரிசளிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்றத்திற்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டுமென்ற இலக்கோடு ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது பாஜக. அதிமுக தனது கூட்டணியில் பாஜகவுக்கு 20 இடங்களை ஒதுக்கியது. ஒரு பாஜக எம்.எல்.ஏ கூட சட்டமன்றத்திற்குள் நுழைந்து விடக் கூடாது, அப்படி நுழைந்து விட்டால் அது தமிழகத்துக்கே பேராபத்து என திமுக உள்ளிட்ட கட்சிகள் சூளுரைத்தன.

அதையெல்லாம் பொருட்படுத்தாது நட்சத்திர பட்டாளங்களை களமிறக்கி அதிரடியாக தேர்தல் பிரச்சாரம் செய்த பாஜக, தேர்தலில் 4 இடங்களை கைப்பற்றியது. நாகர்கோயில் தொகுதியில் எம் ஆர். காந்தி, கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி தொகுதியில் சரஸ்வதி ஆகிய 4 பாஜக வேட்பாளர்கள் வெற்றி வாகையை சூடி 20 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர்.

சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென்ற பாஜகவின் 20 ஆண்டுகால கனவு இந்த ஆண்டு நிறைவேறியது. எனினும் பாஜக தலைவர் மற்றும் துணைத் தலைவராக இருந்த எல்.முருகனும் அண்ணா மலையும் வெற்றி பெறாதது பாஜகவினரை கலக்கமடையச் செய்தது. அதை போக்க எல்.முருகனை மத்திய இணையமைச்சராக்கி அழகு பார்த்தார் பிரதமர் மோடி. அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக்கிவிட்டார். தேர்தல் காயங்களும் மறைந்துவிட்டன.

இந்நிலையில் , தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் இருந்தபோது, சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுதரும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.


அதன்படி,கோவை, நெல்லை, ஈரோடு, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த நந்தகுமார், மகாராஜன், சுப்ரமணியன், தர்மராஜ் ஆகிய 4 மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி யில், மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்று இன்னோவாவை வழங்கினர்.

  • Share on

உங்கள் கட்சியின் சார்பாக ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லையே ஏன்? திருமாவுக்கு பாஜக கேள்வி

மாடு நமக்கு தெய்வம்னு அப்பா சொல்லி அனுப்பினார்; ஆனா, மாட்டுக்கறிதான் என் முழு நேர உணவு – சீமான்

  • Share on