உங்கள் கட்சியின் சார்பாக ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லையே ஏன்? திருமாவுக்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என பணிநியமனம் வழங்கியிருப்பது ஒரு சமூக புரட்சி, இந்தியாவுக்கே வழிகாட்ட கூடிய முன்னோட்ட நடவடிக்கை. பெரியாரின் கனவை நனவாக்கியிருக்கிறது திமுக அரசு என்று சொல்லியிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அனைத்துப் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டத்தை கொண்டுவர தமிழ்நாடு அரசை வலியுறுத்துவோம் என்கிறார்.
இதுகுறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ஹிந்து மதத்தில் பல கோவில்களில் பெண் அர்ச்சகர்கள் உள்ளார்கள். இது தெரியாமல் பேசும் திருமாவளவன் அவர்களே, அனைத்து முஸ்லீம் பெண்களும் மசூதிக்கு சென்று வழிபடலாம் என்றோ அனைத்து பெண்களும் பாதிரியாராகலாம் என்றோ கூறுவதற்கு தைரியமுள்ளதா? என்று கேட்கிறார்.
சரி! சமத்துவம் குறித்து பேசும் நீங்கள் உங்கள் கட்சிக்கு தலைவராக ஒரு பெண்ணை நியமிப்பீர்களா? கடந்த சட்டமன்ற தேர்தலில் உங்கள் கட்சியின் சார்பாக ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லையே ஏன்? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.