• vilasalnews@gmail.com

எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது ஏன்? – செந்தில் பாலாஜி விளக்கம்!

  • Share on

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரெய்டு நடத்தப்படவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று முன்தினம் திடீர் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. அதில் கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் பணமும் சில ஆவணங்களும் சிக்கின. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

எனினும், இதற்கு திமுக தான் காரணம் என அதிமுக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. அதிமுக மீது திமுக அரசுக்கு இருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஐடி ரெய்டு நடத்த திமுக அரசு ஏவிவிட்டிருப்பதாக அதிமுக தலைமை குற்றஞ்சாட்டியது. இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மறுப்பு தெரிவித்திருந்தார். 


தனது வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது குறித்து பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர், இது பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம். எனது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணத்திற்கு கணக்கு உள்ளது. சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது குறித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்படவில்லை. கடந்த 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உள்ள சொத்து மதிப்பின் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டது என்று விளக்கம் அளித்துள்ளார். திமுக அரசை கண்டித்து அதிமுக வரும் 28ம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on

தமிழ்நாட்டில் நடப்பது யார் ஆட்சி....கடுகடுத்த முக ஸ்டாலின்?

ஓபிஎஸ் அவசர டெல்லி பயணம் – என்ன நடந்தது?

  • Share on