வளர்ச்சி, நிர்வாகத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
நெல்லையப்பர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இதுவரை திறக்க படாமல் இருந்த 3 வாயில்களும் திறந்து வழிபாடு நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.
தென்மாவட்டங்களில் பெரிய அளவில் தொழில்நிறுவங்கள் அதிக அளவில் புறக்கணிக்கப்படுவதாகவும், விவசாயிகளின் முன்னேற்றம், வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை இதுவரை திராவிட ஆட்சிகாலங்களில் அமையவில்லை என கூறிய அவர்,
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒரு புதிய மாநிலம் உருவாக்க பட வேண்டும் என்கின்ற கோரிக்கை இருந்து வருகிறது. இந்த நேரத்தில் தமிழகம் மிக பெரிய மாநிலமாக இருக்க கூடிய இச்சூழ்நிலையில் நிர்வாக வசதி, மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தென்மாவடங்களை உள்ளடக்கிய ஒரு மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று இருக்கிறது.
இது பிரிவினைவாதம் அல்ல கொங்கு மாநிலம் வேண்டும் என்ற கருத்து மிக வலிமையாக மாறி இருக்கிறது. ஆனால் நாங்கள் திராவிட நாடு கேட்கவில்லை எனவும், அடைந்தால் திராவிட நாடு அடையவிட்டால் சுடுகாடு, இந்தியாவை ஏற்றுக்கொள்ள முடியாது, என கூறிய திமுகவை சூட்டி காட்டிய அவர், நிர்வாகம் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நிர்வாகம் பிரிக்கப்பட வேண்டும் என கூறினார்.
தென்மாவட்டங்களில் தேச விரோத சக்தி ஊடுருவி இருப்பதாகவும், கன்னியாகுமரியில் துறைமுகம் உருவாகுவதை தடுக்கிறார்கள். கூடங்குளத்தில் மின்னுற்பத்தியை வெளிநாட்டினர் தடுக்க நினைக்கிறார்கள். உலகத்தில் மிக பெரிய தொழிற்சாலையான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறையாளர்களால் மூடப்பட்டு இருக்கிறது.
தென்மாவட்டத்தில் தொழிற்சாலைகள், பாலம் கட்டுதல் ஆகிய பணிகளை பிரிவினை வாத சக்திகள் தடுக்கிறது.
ஆகவே வளர்ச்சி, நிர்வாகத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் இதனை மத்திய அரசிடமும், தமிழக அரசிடமும் கோரிக்கை வைக்க இருப்பதாகவும் கூறினார்.