• vilasalnews@gmail.com

மறுபடியும் முதலில் இருந்தா? ரஜினி பேட்டியால் பரபரக்கும் விவாதம்!

  • Share on

இனியும் நான் அரசியலுக்கு நான் வரப்போகிறேனா, இல்லையா என்ற கேள்விகள் எல்லாம் இருக்கிறது. அது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசித்துவிட்டு முடிவை அறிவிப்பேன் என ரஜினி கூறியதை கேட்டவர்கள் என்னது மறுபடியும் முதலில் இருந்தா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்று சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “நான் அரசியலுக்கு வரவில்லையென்று சொன்ன பிறகு மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களை சந்திக்கவில்லை. அண்ணாத்த படப்பிடிப்பு, தேர்தல், கொரோனா இரண்டாவது அலை, உடல்நலம் சம்பந்தமாக அமெரிக்கா சென்றது உள்ளிட்ட காரணங்களால் இந்த சந்திப்பு தள்ளிப்போனது.

இந்த சூழலில், தற்போது மக்கள் மன்றத்தைத் தொடரலாமா? அதனுடைய பணி என்ன? உள்ளிட்ட கேள்விகள் தொடர்ந்து மேலெழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நானும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது குறித்தும் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார்.

ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடும் முடிவை கைவிடுவதாக அறிவித்த பிறகு, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் நிகழ்வு என்பதால், ரஜினியின் திட்டம் என்ன? மன்ற நிர்வாகிகளிடம் ரஜினி என்ன பேசப்போகிறார் என்று இந்த சந்திப்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  • Share on

உ.பியில் மீண்டும் யோகி ஆட்சிக்கு எத்தனை சதவீதம் மக்கள் ஆதரவு! தனியார் செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பில் தகவல்

வளர்ச்சி, நிர்வாகத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்_அர்ஜுன் சம்பத் கோரிக்கை

  • Share on