உத்தரப்பிரதேசத்தில் அடுத்த முறையும் பாஜகவின் யோகி ஆதித்யநாத் முதல்வராக தொடர்வார் என 52 சதவிகித மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.,
உத்தரப் பிரதேசத்தில் 2022ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தற்போது, இந்தோ ஏசியன் நியூஸ் சர்வீஸ் என்கிற தனியார் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்புகளில் 52 சதவிகித மக்கள் மீண்டும் பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சியை தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும், 37 சதவிகிதமான மக்கள் யோகியின் ஆட்சியை விரும்பவில்லையென்றும் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ல் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பாஜகவின் யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரியங்கா காந்திக்கு அதிக செல்வாக்குள்ள ரேபரேலி தொகுதியில் உட்பட் 7 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் பாஜக 39.67% வாக்குகளையும், பகுஜன் சமாஜ் 22.23% வாக்குகளையும், சமாஜ்வாடி 21.82% வாக்குகளையும், காங்கிரஸ் 6.25% வாக்குகளையும் பெற்றிருந்தது.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 80 எம்.பி தொகுதிகள் உள்ளன. எனவே இந்த மாநிலத்தில் வெற்றிபெறுபவர்கள் மத்தியில் ஆட்சியை தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள்.
அதேபோல, மற்றொரு கருத்துக்கணிப்பில் 46 சதவிகிதமானோர் புதிய மத்திய அமைச்சரவை நாட்டை மேலும் வளமிக்கதாக மாற்றும் என்றும், 41 சதவிகிதமானோர் தற்போதைய நிலையே தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.