• vilasalnews@gmail.com

‘’ஜெயலலிதா, வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்தார். இப்போது நீங்கள் கவிழ, பாஜகவுடனான கூட்டு முதல் காரணம்.’’ சொல்கிறார் முன்னாள் எம்.பி!

  • Share on

முன்னாள் எம்.பியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான (மார்க்சிஸ்ட்) டி.கே.ரங்கராஜன், ‘’ஜெயலலிதா, வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்தார். இப்போது நீங்கள் கவிழ, நூறு காரணங்கள். பாஜகவுடனான கூட்டு முதல் காரணம்.’’ என்று தனது கருத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் நாம் தோற்றோம் என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூற, அதிமுகவால் தான் பாஜக தோற்றது என்று பதிலுக்கு கே.டி.ராகவன் வெடிக்க கூட்டணி சர்ச்சை உண்டானது.

கூட்டணி தொடர்கிறது என்று ஓபிஎஸ் விளக்கம் கொடுத்தாலும் கூட, சி.வி.சண்முகம் அப்படி திடீரென்று வெடிக்க காரணம் என்ன? என்று தமிழக அரசியலில் பெரும் விவாதமே நடந்து வருகிறது. அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும், இந்த கூட்டணி இனி நீடிக்காது என்றும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.


இந்நிலையில்தான் டி.கே.ரங்கராஜன் தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார். அவர் மேலும், ‘’முன்பு ஜெயலலிதாவே கடற்கரையில் ஒரு பெரிய கூட்டம் கூட்டி ‘நான் தவறு செய்துவிட்டேன். பாஜகவுடன் இனி எந்த உறவும், கூட்டும் இல்லை’ என்று சொன்னபோது சண்முகம், எடப்பாடி, பன்னீர் எங்கே இருந்தார்கள்?’’என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

அதாவது ஜெயலலிதா அப்படி சொன்ன கட்சியுடன் ஏன் கூட்டணி அமைத்தீர்கள் என்று அவரது கேள்வியில் இருக்கிறது.

டி.கே.ராஜனின் இந்த கேள்விக்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ’’தி. மு. க ஊழல் கட்சி என்று விமர்சித்து பெரிய கூட்டணி அமைப்பதாவும், இனி தி. மு. கவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று நீங்கள் சொன்னபோது எங்கிருந்தார்களோ அங்கிருந்தார்கள்’’என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

எனவே, பாஜக - அதிமுக கூட்டணி விவகாரம் தமிழக அரசியலில் விவாத பொருளாக மாறி தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

  • Share on

திமுகவில் இணைகிறார் மநீம மகேந்திரன்!

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு…' படிப்பு பற்றி என்ன தெரியும்…? அன்புமணி காட்டம்..!

  • Share on