• vilasalnews@gmail.com

திமுகவில் இணைகிறார் மநீம மகேந்திரன்!

  • Share on

மக்கள் நீதி மய்யம் கட்சித் துணைத்தலைவராக இருந்த மகேந்திரன் நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியில் மக்கள் நீதி மையம் 144 தொகுதிகளிலும், ஐஜேகே 40 சட்டமன்ற தொகுதிகளிலும், ச.ம.க 37 சட்டமன்ற தொகுதிகளிலும், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி 10 சட்டமன்ற தொகுதி எஸ்டிபிஐ போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து, தேர்தலில் மக்கள் நீதி மையம் படுதோல்வி அடைந்தது. கோவை தெற்கு தொகுதியில் மட்டும் கமல்ஹாசன் 1200 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

இதையடுத்து தேர்தலில் மக்கள் நீதி மையம் தோல்வியை சந்தித்தது குறித்து கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை மேற்கொண்டது இந்த கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் கட்சியில் ஜனநாயகம் இல்லை, கமலஹாசன் அவர்கள் நான் சொல்வதைத் தான் கட்சியில் அனைவரும் கேட்க வேண்டும் என்கின்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து கட்சியின் மற்ற முக்கிய நிர்வாகிகளான பொன்ராஜ், குமரவேல், மவுரியா, முருகானந்தம், சந்தோஷ்பாபு, பத்ம பிரியா உள்ளிட்ட அனைவரும் கட்சியில் இருந்து விலகினர்.


இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் நாளை மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கட்சியில் அவருக்கு ஒரு முக்கிய பதவி மற்றும் ஒரு பொறுப்பு வழங்க படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் ஒரு முக்கிய நிர்வாகியை திமுக தன்வசம் இழுத்து உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

பாஜக உடனான அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் தொடருமா? ஜெயக்குமார் பதில்!

‘’ஜெயலலிதா, வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்தார். இப்போது நீங்கள் கவிழ, பாஜகவுடனான கூட்டு முதல் காரணம்.’’ சொல்கிறார் முன்னாள் எம்.பி!

  • Share on