• vilasalnews@gmail.com

அதிமுக தோற்றதற்கு பாஜக தான் காரணம் – சி.வி.சண்முகத்தின் கருத்துக்கு கே.டி.ராகவன் பதிலடி!

  • Share on

பாஜகவால் தான் அதிமுக தோற்று விட்டதாக சி.வி.சண்முகம் கூறியதற்கு பாஜகவின் கே.டி.ராகவன் பதிலடி கொடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகம், கூட்டணி சரியில்லாததால் அதிமுக ஆட்சியை இழந்து விட்டது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தோல்வியை சந்தித்தோம். அக்கூட்டணியால் சிறுபான்மையினரின் ஓட்டுகளை இழந்துவிட்டோம். விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமே 20 ஆயிரம் சிறுபான்மையினர் ஓட்டுகள் உள்ளன. நாம் 14 ஆயிரம் வாக்குகளில் தொகுதியை இழந்தோம் என்று பேசினார். சண்முகத்தின் இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பாஜக மீது வைத்த குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி “உங்களால் தான்” என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு…என பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவே தெரிகிறது. உள்ளாட்சி தேர்தல் குறித்து அண்மையில் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்போமா என்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவெடுக்கும் என்று கூறியிருந்தார். பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலையும் இவ்வாறே கூறியிருந்தார்.

இதன் மூலமாக, அதிமுக – பாஜக கூட்டணியில் குழப்பம் நிலவுவது அப்பட்டமாக தெரியும் நிலையில் தற்போது சி.வி.சண்முகமும் கே.டி.ராகவனும் நேரடியாக எதிர் துருவங்கள் போல மோதிக்கொள்வது கூட்டணியில் பிரச்சனை நிலவுவதை உறுதிப்படுத்துகிறது.

  • Share on

அ.தி.மு.க தேர்தல் தோல்வி: பா.ஜ.க கூட்டணிதான் காரணம் - சி.வி.சண்முகம் குமுறல்

பாஜக உடனான அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் தொடருமா? ஜெயக்குமார் பதில்!

  • Share on