• vilasalnews@gmail.com

எடப்பாடி ஆட்சியை அமைத்து கொடுத்ததே நான் தான் - சசிகலாவின் அடுத்த ஆடியோ!

  • Share on

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருந்த சசிகலா திடீரென சிறை செல்ல நேர்ந்தது. சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அவருக்கு அதிமுகவில் இடமில்லை என ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிவித்துவிட்டார்கள். சசிகலா இதனை எதிர்பார்க்கவில்லை. 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து விட்டு சென்னை திரும்பிய சசிகலா அதிமுகவிற்கு பல சிக்கல்களை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தேர்தலின் போது அதிமுகவுக்கு எந்தவித இடையூறும் கொடுக்காமல் தான் அரசியலிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார். புலி பதுங்குவது பாய்வதற்காகத் தான் என அன்றே யூகித்தனர் அரசியல் விமர்சகர்கள். அது போலவே, தற்போது அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் களமிறங்கியிருக்கிறார் சசிகலா. அவ்வப்போது அதிமுக தொண்டர்களுடன் பேசி, ஆடியோக்களை வெளியிட்டு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், தேனியை சேர்ந்த அதிமுக நிர்வாகி கர்ணனுடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுக எப்படி இருந்ததோ அதே போல் கட்சியை வழி நடத்துவேன். ஜெயலலிதாவின் தாயை விட அதிக நாட்கள் பாதுகாத்ததே எனது பெரிய பாக்கியம். சிறைக்குச் செல்வதற்கு முன்பு எம்எல்ஏக்களை கூட்டி ஆட்சியை முறையாக அமைத்துக் கொடுத்து விட்டு தான் சென்றேன் என்று கூறியுள்ளார்.

  • Share on

'அதிமுகவை காப்பாற்ற வாருங்கள்' விருதுநகரில் ஓட்டப்படுள்ள போஸ்டரால் பரபரப்பு

தன்னுடைய பினாமி கட்சியை கூட வெற்றி பெற வைக்க இயலாத சசிகலா அதிமுகவை என்ன செய்து விட முடியும்..? கொந்தளிக்கும் முன்னாள் அமைச்சர்

  • Share on