• vilasalnews@gmail.com

‘அணிலால் மின்தடை’ செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு தர வேண்டும் : செல்லூர் ராஜூ விமர்சனம்!

  • Share on

தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதற்கு அணில்கள் காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் தெரிவித்தார். இது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மின்தடை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் மின்கம்பிகளில் ஓடும் அணில்களால் மின்தடை ஏற்படுகிறது.

அணிலால் மின்தடை

அணில்களால் ஏற்படும் மின் தடை உலக அளவில் மின் வாரியங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்று கூறினார். இதை பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் சமூக வலைத் தளத்தில் விமர்சித்து வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செந்தில் பாலாஜியின் கூற்றை கிண்டல் செய்துள்ளார்.

அணிலால் மின்தடை ஏற்படுவதாக கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

செந்தில் பாலாஜியின் கண்டுபிடிப்பால் நல்லவேளை நான் தப்பித்து விட்டேன். எங்கள் ஆட்சியில் வெளிநாடு சென்ற அணில்கள் தற்போது மின்கம்பிகளில் சென்று கொண்டிருக்கின்றன என்று கூறியுள்ளார்.

  • Share on

வேர்கள் போல் இருக்கும் தொண்டர்களை நீக்குவது தவறு : சசிகலாவின் அடுத்த ஆடியோ!

50 நாட்களை கடந்த திமுக ஆட்சி: சீமான் விமர்சனம்

  • Share on