• vilasalnews@gmail.com

பொருளாதார அறிஞர்களுக்கான ஊதியம் எவ்வளவு அரசு அறிவிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்

  • Share on

இடதுசாரி மற்றும் சந்தை பொருளாதார ஆதரவாளர்களை நியமித்திருப்பது தமிழக பொருளாதாரத்தின் செல் திசையை நிர்ணயிப்பதில் குழப்புவதாக இருக்கிறது எனக் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

 இதுகுறித்து, பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் சமூக வலைத்தளங்களில் குறியுறுப்பதாவது:  ''தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆலோசனை சொல்ல இடதுசாரி பொருளாதார சாய்வுள்ள பேராசிரியர் ஜெயரஞ்சனையும், பொருளாதார ஆலோசனைகள் சொல்ல சந்தை பொருளாதார ஆதரவாளர்களான ரகுராம் ராஜன், ஜீன் றீஸ், அரவிந்த் சுப்ரமணியம், எஸ்தர், நாராயணன் உள்ளிட்டோரையும் நியமித்திருப்பது தமிழக பொருளாதாரத்தின் செல் திசையை நிர்ணயிப்பதில் குழப்புவதாக இருக்கிறது.

 பொருளாதாரம், வளர்ச்சி என்ற வாகனத்தின் இரண்டு சக்கரங்களும் முற்றிலும் எதிர் எதிர் திசையில் சென்றால் என்ன விதமான முன்னேற்றம் ஏற்படும். முற்றிலும் முரண்பட்ட இரு வேறு தரப்பும் என்ன விதமான வழியை காட்டுவார்கள் என்ற ஐயத்தை அரசு தெளிவு படுத்த வேண்டும்.

 பொருளாதார வளர்ச்சி குழுவினரில் பெரும்பாலானோர் கின்னிஸியன் பொருளாதார செயல்பாடுகளை ஆதரிப்பவர்கள். கடன் வாங்குவதை வளர்ச்சி செயல்பாட்டின் ஒருபகுதியாக பார்ப்பவர்கள். தமிழகத்தின் தற்போதைய கடன் சுமையே 5.5 லட்சம் கோடிக்கு அருகில் இருக்கையில் இவர்களின் அதீத கடன் ஆதரவு போக்கு மாநிலத்தின் கடன் சுமையை அபரிமிதமாக உயர்த்தி விடும் என்ற அச்சத்தை தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும்.

 அதோடு பொருளாதார அறிஞர்களுக்கான ஊதியம் எவ்வளவு என்பதையும் வெளிப்படையாக அரசு அறிவிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

  • Share on

தி.மு.கவை ஆட்டிபடைக்கும் மின்வெட்டு - சட்டசபையில் நடைபெற்ற காரசார விவாதம்!

“மின்தடை ஏற்பட அணில் மட்டுமே காரணம் என்று கூறவில்லை” - செந்தில் பாலாஜி விளக்கம்!

  • Share on